Breaking

Wednesday, 13 March 2019

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷியங்கள்



 இறுதியாக இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட் போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட் போனும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.பட்ஜெட் விலையில் பல விதமான அம்சங்களை இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ மொபைல் கொண்டுள்ளதால், ஸ்மார்ட்போன் துறையில் ஒரு புதிய கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது. 
1. சோனி இமேஜ் சென்சாருடன் கூடிய 48 MP கேமரா


இந்த ஸ்மார்ட் போன் சோனி IMX586 சென்சாருடன் 48 மெகாபிக்சல் என்ற பின்பக்க கேமராவை கொண்டுள்ளது.  சோனியின் IMX586 சென்சார் மூலம் எடுக்கப்படும் படங்கள் மிகவும் துல்லியமாக உள்ளது.இதனால் குறைந்த ஒளியிலும் புகைப்படங்களை எடுப்பதற்கு உகந்ததாக உள்ளது. 
2.குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 செயலி  
ரெட்மி நோட் 7 ப்ரோ, புதிய ஸ்னாப்ட்ராகன் 675 செயலி மூலம் இயக்கப்படுகிறது. CPU செயல்திறன் அடிப்படையில், ஸ்னாப்ட்ராகன்  675 சமீபத்திய Cortex A76 கோர்களையும் பயன்படுத்துகிறது இது ஸ்னாப்ட்ராகன்  710 SoC உடன் ஒப்பிடுகையில் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. மேலும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 செயலி , 11nm செயல்முறை மற்றும் கிராபிக்ஸ்க்காக  Adreno 612 GPU ஐ அடிப்படையாக கொண்டுள்ளது.
3.18W வேகமாக சார்ஜாகும் வசதி
ஒரு புதிய Redmi ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் CCC ஆணையத்தால் சான்றளிக்கப்பட்டது. அந்த ஸ்மார்ட்போன் போலவே உள்ள இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ 18W வேகமாக சார்ஜாகும் அம்சத்தையும் , USB type C மூலம் குய்க் சார்ஜ் 4.0 வசதியையும்  கொண்டுள்ளது.
4. நீரை விரட்டும் அம்சம் 
இந்த ஸ்மார்ட் போனில் நீர் புக விடாத வசதி இல்லை, ஆனால் P2i பூச்சு மூலம் நீரை விரட்டும் தன்மையைக் கொண்டுள்ளது.
5. 4K வீடியோக்கள் பதிவு
முன்னணி கேமராக்களில், 4K வீடியோக்கள் 30fps ல்  பதிவு செய்யக்கூடிய திறன் கொண்டது, அதேசமயம் 13 MP செல்பி கேமராமில் 1080p வீடியோக்கள் 30fps பதிவு செய்யலாம்.
குறிப்பு :1080p வீடியோ பதிவுக்காக மட்டுமே EIS(electronic image stabilization) இயங்குகிறது.
மேலும் ரெட்மி நோட் 7 ப்ரோ மொபைலின் முழு விவரம் பற்றி அறிய இந்த வீடியோவை பார்க்கவும்

No comments:

Post a Comment

Adbox